கணவன் மனைவியர் வேண்டும் ஜெபம்

சேசுக்கிறீஸ்துநாதருக்கும், திருச்சபைக்குமுள்ள நேச ஐக்கியத்தைப் போல உலக பரம்புதலுக்காகவும் அன்னியோன்னிய நேசத்துக்காகவும் பரிசுத்த மெய்விவாகத்தை அர்ச்சித்தருளின சர்வேசுரா, அதன் ஆசீர்வாதத்தின் வரத்தை இருவரும் வணக்கத்தோடு ஏற்றுக்கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபை புரியும். எங்க ளுடைய ஐக்கியத்தை இடைவிடாமல் ஆசீர்வதிக் கவும் அதனால் நாங்கள் இருவரும் எல்லாக் கடமைகளையும் சமாதானத்தோடும் சிநேகத்தோடும் பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக் கொருவர் நடத்தவும் உம்மை மன்றாடுகிறேன்.  பிரிவுபடக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் பரிசுத்த கட்டைப் பலவீனப்படுத்தத்தக்க எவ்வித துஷ்ட குணத்திலும் கெட்ட கிரிகையிலுமிருந்து என்னை விடுவித்தருளும். எப்படியாகிலும் என் சுய இஷ்டத்தையும், பிரியத்தையும் எதிர்த்து உமக்குப் பிரியப்பட நடக்கச் சுறுசுறுப்புள்ளவனாகவும், ஆசையுள்ளவனாகவும் செய்தருளும். இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முறுமுறுத்து, எல்லாவற்றிற்கும் காரணரும் எல்லாவற்றையும் கொடுக்கிறவருமாயிருக்கிற உம்மைப் பூலோக வாழ்வினால் மகிழ்ந்துபோய் மறவாதிருக்கச் செய்யும். பொறுமையாலும் சாந்த குணத்தாலும் செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்ப்படிந்திருக்க என்னை ஆசீர்வதித்து உமக்குத் தகுந்தவனாயிருக்கவும் செய்தருளும். 

ஆமென்.