கடல் பயணிகள், தொழிலாளர் ஜெபம்

சர்வ வல்லபரான சர்வேசுரா!  முன்னாளில் பெரும் வெள்ளத்தில் மிதந்த நோவாவின் பெட்டகத்தை ஆசீர்வதிக்கத் தேவரீர் தயை புரிந்தது போல, இதோ எம் மன்றாட்டுக்களுக்கு இரங்கி, இந்தக் கலம் / கப்பலில் பயணம்  செய்பவர்கள் அனைவரையும் உம் திருக்கரத்தால் ஆசீர்வதித் தருளும்.

கடல் மேல் நடந்து சென்ற அர்ச்சியசிஷ்ட இராயப்பருக்குத் தேவரீர் செய்தது போல, உம் வலது கரத்தை நீட்டி, இவர்களுக்கும் ஆதரவு கொடுத்தருளும்.  பரலோகத்தினின்று உமது பரிசுத்த தூதரை அனுப்பி, இந்தக் கலத்தில் / கப்பலில் உள்ள யாவரையும் சகல விதமான ஆபத் துக்களிலிருந்தும் காப்பாற்றும்படிச் செய்தருளும்.  சகல எதிர்ப்புகளையும் அகற்றி, உம் ஊழியர்களை எப்பொழுதும் அவர்கள் விரும்பும் துறைமுகத் துக்குப் பாதுகாப்பாய்க் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்கள் தங்கள் தொழில்களை எல்லாம் சரிவரச் செய்து முடித்த பிறகு, தக்க காலத்தில் தங்கள் சொந்தக் கரைக்கு மகிழ்ச்சியாய்த் திரும்பி வந்து சேரத் தயை புரிவீராக.  சதாகாலமும் ஜீவியரும் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாய் இருக்கிற ஆண்டவரே. 

ஆமென்.