மிருகங்களுடைய நோய்களுக்காக ஜெபம்

ஆண்டவரே!  மிகுந்த தாழ்ச்சியோடு நமஸ்கரித்து உம்முடைய இரக்கத்தைக் கேட்கிறோம். அதேதென்றால் கடின நோயால் பீடிக்கப்பட்டிருக்கிற இந்த மிருகம் உம் ஆசீர்வாதத்தினாலே சுகமடைந்து இனி யாதொரு நசல் நோய் படாதபடி பசாசின் சகல தொந்தரவுகள் விலகிப் போகச் செய்யும். நீர்தாமே அவைகளுக்குச் சீவனும் ஆரோக்கியமுமாயிருக்கக் கடவீர். சர்வ தயாபர சர்வேசுரா!  நீரே இப்படிப்பட்ட மவுன ஜீவப் பிராணிகளை மனுஷருடைய பிரயாசத்துக்கு ஆறுதலாக கொடுத்திருக்கிறபடியால் எங்கள் பிழைப்புக்கு வேண்டியிருக்கின்ற அவைகளுடைய உபகாரம் எங்களுக்கில்லாமல் போகாதபடிக்குக் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவினிமித்தம் தந்தருளும். 

ஆமென்.