நல்ல மரணத்துக்கு ஆயத்தம்

(நல்ல மரணத்திலே நித்திய பேரின்பமும் துர்மரணத்திலே நித்திய நரக நிர்ப்பந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கின்றது.  நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாயிருக்கிற படியினாலும், உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப்போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமல்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றம் கொள்ளும்போது குருவானவரை அழைத்துப் பாவசங்கீர்த்தனம், தேவ இஷ்டப்பிரசாதம், அவஸ்தைப் பூசுதல், இவைகளை உத்தம விதமாய்ப் பெற்று அடிக்கடி விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேக முயற்சிகளையும், உத்தம   மனஸ்தாப மந்திரம், கர்த்தர் கற்பித்த ஜெபம் மற்றும் மங்கள வார்த்தை செபங்களையும் செபித்து, இதனடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.)