தயவுள்ள பிதாவே! உம் அளவில்லாத கிருபையினால் என் பாவங்களைப் பொறுத்தருளும். மகா பாவியாகிய அடியேன் மேல் இரக்கமாயிரும்.
உம்முடைய நீதிப் பிரகாரமாய் எனக்குத் தீர்வையிடாதேயும். தயாளமுள்ள கர்த்தாவே! பாவிகளுக்காக உம்முடைய திரு இரத்தத்தைச் சிந்தினீரே. அதில் ஒரு துளியாகிலும் அடியேன் மேல் இரக்கமாய் விழச் செய்து, என்னைப் பரிசுத்தனாக்கும்.
ஆ என் நல்ல பிதாவே! தேவரீருக்கு நான் துரோகம் செய்தது எவ்வளவோ அநியாயம், எவ்வளவோ நன்றியறியாமை! என் பாவங்களை யயல்லாம் முழு மனதோடு வெறுத்து விடுகிறேன்.
நிஷ்டூரப் பாவமே! என் திவ்விய கர்த்தரை வாதித்தாய். எனக்கு மோட்ச வாசலை அடைத்து, என்னை நரகத்தின் பயங்கர ஆக்கினைகளுக்கு உள்ளாக்கக் காரணமாயிருந்தாய். உன்னை என்றென்றைக்கும் அருவருத்துத் தள்ளுகிறேன்.
என் பிரிய சேசுவே! என் பாவத்துக்குப் பரிகாரமாக இந்தக் கஸ்தி கொடுக்கிறீர். அடியேன்மேல் உமக்குள்ள தயவினாலே என்னைத் தண்டிக்கிறீர். உமக்குத் தோத்திரம் சுவாமி. உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும் சுவாமி.
ஆ என் ஆத்துமமே! இந்தக் கஸ்தி உனக்குக் கடினமாய்த் தோன்றுகிறதற்கு நியாயம் இல்லை. உன் பாவங்களுக்கு மருந்து வேண்டாமோ? பரம கர்த்தர் உன் பாவங்களுக்காக உன்னைப் பார்க் கிலும் எத்தனையோ அதிக கஸ்தி நிர்ப்பந்தம் அனுபவித்தார்.
ஆ என் திவ்விய சேசுவே! மாசில்லாதவ ராகிய தேவரீர் அடியேனுக்காகப் பொறுமை யோடு சகல கஸ்தியும்பட்டிருக்க, பாவியாகிய நான் கஸ்தி பொறுக்காமல் எப்படி முறையிடு வேன்? சுவாமி! எனக்குப் பொறுமையைத் தந்தருளும். தேவரீர் அனுபவித்த கடின பாடுகளையும், மரணத்தையும் பார்த்து, என் மரண நேரத்திலே என்னை இரட்சித்தருளும் சுவாமி.
என் திவ்விய கர்த்தாவே! தேவரீர் திருச்சபை யைக் கொண்டு எனக்குப் போதிக்கிறதெல்லாம் உறுதியாக விசுவசிக்கிறேன். என் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்தருளும்.
என் மதுர சேசுவே! எனக்காகக் கடின பாடு களைப் பட்டு நிஷ்டூர மரணத்தை அடைந்தீரே. உம்மை நம்பியிருக்கிறவர்களை இரட்சிக்க வார்த் தைப்பாடு கொடுத்தீரே. உம்மை முழு மனதோடு நம்பியிருக்கிறேன். என்னைக் கைவிடாதேயும். என்னைப் பரகதியில் சேர்த்தருளும் சுவாமி.
மட்டில்லாத சகல நன்மைச் சொரூபியா யிருக்கிற சர்வேசுரா சுவாமி, என் இருதயத்தை முழுதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் அளவில்லாத சிநேகத்துக்குப் பாத்திரமாயிருக்கி படியினாலே உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன். எல்லாவற்றையும் பார்க்கிலும் உம்மை சிநேகிக்கிறேன். சுவாமி, உம்முடைய திவ்விய சிநேகத்தின் அக்கினியை என் ஆத்து மத்தில் எரியப் பண்ணும்.
ஆ என் அன்புள்ள இரட்சகரே! பிரியமுள்ள சேசுவே! என் மேலுள்ள அன்பினால் எனக்காக உம்முடைய உயிரைத் தந்தீர். உம்முடைய ஆசை யினால் உமது திருக்கரத்தில் என் உயிரை விட நான் ஆசையாயிருக்கிறேன். என் அன்பே, என் சீவியமே, இந்தப் பரதேசத்தை விட்டு எப்போது உம்முடைய பாக்கியமுள்ள தரிசனையை அடைவேன்?
அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே, தயாளமுள்ள தாயே, எனக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள் ளும்.
தேவமாதாவே! என் பேரிலே தயையாயிரும். எனக்கு உதவியாயிரும்.
என் காவலான சம்மனசானவரே! இந்த ஆபத்துள்ள வேளையில் இடைவிடாமல் என் னைக் காத்தருளும்.
நான் பேர் கொண்டிருக்கிற அர்ச்சிய சிஷ்டவரே, சகல மோட்சவாசிகளே, அடியேனும் பரகதியை அடைந்து உங்களோடு சர்வேசுரனைத் துதிக்கும்படிக்கு எனக்காக வேண்டிக்கொள் ளுங்கள்.
சேசு மரி சூசை, எனக்கு அடைக்கலமா யிருங்கள்.
வியாதிக்காரனுடைய இனத்தாரும், சிநேகிதரு மானவர்களே, இந்த ஆபத்துள்ள சமயத்தில் இவன் ஆத்துமம் பரகதியில் சேரும்படிக்கு உங்களால் இயன்ற மட்டும் செபத்தினாலும் புத்தி சொல்லு தலினாலும் உதவி செய்யுங்கள். இவன் தன் ஆன்ம காரியத்தை சரியாய்த் தீர்க்கவும், அடிக்கடி சர்வேசுரனை நினைத்து மன்றாடவும் ஏவுதலைச் சொல்லுங்கள். அதனால் இவன் பரகதி அடைந்த பிறகு, உங்களை என்றென்றைக்கும் ஆசீர்வதிப் பான். ஆனால் உங்கள் அசட்டையினாலே இவன் நரகத்தின் அக்கினியில் விழுந்தால், இவனுக்கும், உங்களுக்கும் எத்தனையோ கேடாயிருக்கும். இப்போது இவன் மேல் மனமிரங்காமலிருப்பீர்களோ?
நல்ல மரணத்தினாலே நித்தியப் பேரின்பமும், துர்மரணத்தினாலே நித்திய நரக நிர்ப்பந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசர மான காரியமாயிருக்கிறது. நன்மரண ஆயத்தத் துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாயிருக்கிறபடியினால், உனக்குச் சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக் கப்போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத் தைச் சுத்தி செய்வதுமல்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றம் கொள்ளும்போது, குருவானவரை அழையாமல், நல்ல நினைவு இருக்கும்போதே குருவானவரை அழைத்து பாவசங்கீர்த்தனம், தேவ நற்கருணை, அவஸ்தைப் பூசுதல் இவைகளை உத்தம விதமாய்ப் பெற்று, அடிக்கடி விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேக முயற்சிகçயும், உத்தம மனஸ்தாப பரலோக, அருள் நிறை மந்திரங்களையும் ஜெபித்து,இதனடியில் வரும் ஜெபத்தையும் ஜெபித்துக் கொண்டு வருவாயாக.