மழைக்காக வேண்டும் ஜெபம்

தப்பில்லாத கிரமத்தோடு சகலத்தையும் நடப்பிக்கிற சர்வேசுரா, நாங்கள் பிழைக்கவும், நடக்கவும், இருக்கவும் காரணரான கர்த்தாவே, எங்களுக்குப் போதுமான மட்டும் நல்ல மழை பெய்யவும் தவச தானிய முதலான செல்வங்கள் ஓங்கி அதிகரிக்கவும் கிருபை செய்தருளும்.  நாங்கள் அதிக தாற்பரியத்தோடு நன்றியறிந்து தர்மநெறியில் நடந்து உமக்குத் திருப்பணி புரிந்து மோட்ச செல்வத்தை நாடி அடைய அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. இந்த மன்றாட்டுக்களை யயல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுநாத ருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும். 

ஆமென்.