அநுதினம் திவ்விய நன்மை வாங்கும் பக்தியை மூட்ட பரிசுத்த கன்னி மரியாயிடம் வேண்டும் ஜெபம்

ஓ!  கன்னிமரியாயே, மகா பரிசுத்த தேவ திரவிய அநுமானத்தின் எங்கள் ஆண்டவளே! திருச்சபையின் சந்தோஷமே, உலகத்தின் இரட்சணியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். விசுவாசிகள் அனைவரும் அநுதினம் திவ்விய நன்மை வாங்கப் பாத்திரவான்களாகத்தக்கதாக, அவர்களிடத்தில் பரிசுத்த தேவ நற்கருணையின் பேரில் பக்தியை மூட்டுவீராக.

(300 நாட்பலன்) 10-ம் பத்திநாதர்.