இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எட்டாம் செபம்

இருதயங்களுக்கு மதுரமுமாய்ப் புத்திக்கு இன்பமுமாயிருக்கிற சேசுவே! தேவரீர் எங்கள் மேல் வைத்த நிகரில்லாத அன்பினால் பிச்சு கலந்த காடியின் கசப்பை எங்களுக்காகச் சுவை பார்த்தருளினதை நினைத்தருளும் சுவாமி. ஆ, என் ஆண்டவரே! எங்கள் மரணத்தருவாயில் எங்கள் ஆத்துமங்களுக்கு மருந்தும் ஆறுதலுமாயிருக்கிற உமது திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் தகுதியான முறையில் நாங்கள் உட்கொள்ளத்தக்கதாக கிருபை செய்தருளும் சுவாமி.

ஒரு பர., அருள், திரி. ஆமென்.