ஒன்பதாம் செபம்

இருதயங்களுக்கு ஞான சந்தோஷமும் சத்துவமும் அரசாட்சியுமாயிருக்கிற சேசுவே! தேவரீருடைய மரணத்தின் கொடுமையாலும், யூதர்கள் உம்மை கொடூரமாய்ப் பரிகாசம் செய்து தூஷணித்த தூஷணங்களாலும் உமது திவ்விய பிதாவைப் பார்த்து: என் பிதாவே! என் பிதாவே! என்னை ஏன் கைவிட்டீர் என்று பேரொலியாய்க் கூப்பிட்ட பொழுது தேவரீர் அனுபவித்த துக்கப் பெருக்கத்தையும், மரண உபத்திரவங்களையும் நினைத்தருளும் சுவாமி. ஆ, என் இரட்சகரே! இப்படிப்பட்ட துக்க உபத்திரவங்களைப் பார்த்து என்னை தொடர்ந்துவரும் துன்ப துரிதங்களிலும் என் மரண வாதைகளிலும் என்னைக் கைவிடாமல் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி.

ஒரு பர., அருள், திரி. ஆமென்.