ஏழாம் செபம்

வற்றாத பக்தியின் ஊற்றாயிருக்கிற சேசுவே! தேவரீர் சிலுவை மரத்தில் தொங்கும்பொழுது மனிதர் இரட்சண்யத்தின் மேல் உமக்கிருந்த தயை மிகுந்த தாகத்தினால், தாகமாயிருக்கிறோமென்று திருவுளம்பற்றினதை நினைத்தருளும் சுவாமி. ஆ, என் இரட்சகரே! சரீர இன்பத்திலும், உலக இச்சையிலும் எங்களுக்கு இருக்கிற வீண் ஆசையை ஒழித்து, சகல தருமக் கிரியைகளின்மேல் ஞான ஆசை வளரத் தக்கதாகக் கிருபை செய்தருளவேண்டு மென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி.

ஒரு பர., அருள்., திரி.  ஆமென்.