பதிமூன்றாம் செபம்

ஜெயசீலருமாய் மகா பராக்கிரம சிங்கமுமாய்ச் சிரஞ்சீவியுமாயிருக்கிற சேசுவே! தேவரீருடைய சரீர சத்துவமும், இருதய பலமும் அற்றுப்போய் திருமுடி காய்ந்து எல்லாம் நிறைவேறிற்று என்று திருவுளம் பற்றின பொழுது நீர் அனுபவித்த துக்கப் பிரளயத்தை கைவிடப்பட்ட வேதனையைப் பார்த்து என் புத்தி கலங்கி ஏங்கி நான் மரண அவஸ்தைப்படும் பொழுது என்மேல் கிருபைவைத்து அன்புகூர்ந்து என்னை இரட்சிக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி. ஆ, என் நல்ல சேசுவே!

ஒரு பர., அருள்., திரி. ஆமென்.