பதிநான்காம் செபம்

நித்திய பிதாவின் ஏக சுதனுமாய்த் தெய்வீக ஒளியின் சாயலுமாயிருக்கிற சேசுவே! தேவரீர் உமது பிதாவை நோக்கி: பிதாவே, என் ஆத்துமத்தை உமது திருக்கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் என்று தாழ்ச்சியோடு திருவுளம் பற்றிக் கையளித்து, எங்களை மீட்கும் பொருட்டு உமது திருவுடல் முழுவதும் அடிகளால் நைந்து, அன்பு நிறைந்த உமது திரு இருதயம் பிளந்து தயை நிறைந்த திருவுள்ளந் திறந்து, திரு மரணமானதை நினைத்தருளும் சுவாமி. அர்ச்சியசிஷ்டவர்களுக்கு அரசரே! அளவில்லாத பலன்பொருந்திய இந்தத் திரு மரணத்தைப் பார்த்து உலகம், சரீரம், பசாசு என்னும் இம்மூன்று சத்துருக்களை அடியேன் ஜெயித்து உலகத்திற்கு மரித்து உமக்காக மாத்திரமே ஜீவித்திருக்க, வேண்டிய உதவிபுரிந்து என்னைப் பலப்படுத்தியருளும். கடைசியாய் என் ஆத்துமம் உடலைவிட்டு, உமது தேவ சமுகத்திற்கு வரவும், நீர் அதைக் கைக்கொள்ளவும் செய்யவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறேன் சுவாமி.

ஒரு பர., அருள்., திரி. ஆமென்.