பன்னிரண்டாம் செபம்

சத்தியக் கண்ணாடியுமாய் சிநேக ஒருமையின் இணைப்புமாயிருக்கிற சேசுவே! தேவரீர் உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால்வரை பட்ட காயங்களின் மிகுதியையும் அந்தக் காயங்களிலிருந்து பெருகி ஓடின இரத்தப் பிரவாகத்தால் உமது மாசற்ற தேகத்தில் அனுபவிக்கத் திருவுளமான இப்படிப்பட்ட துக்கப் பெருக்கத்தையும் நினைத்தருளும் சுவாமி. ஆ, என் மதுர இரட்சகரே! இதிலும் அதிகமாய் நீர் எங்களுக்காகச் செய்யத்தக்கது என்ன இருக்கிறது? தேவரீருடைய திரு இரத்தத்தால் உமது காயங்கள் யாவையும் என் இருதயத்தில் எழுதியருளும். நான் அவைகளை வாசித்து உமது திவ்விய பாடுகளையும் திரு மரணத்தையும் உணர்ந்து நன்றியறிந்து என் மரணம் மட்டும் சத்தியத்தில் நிலை கொண்டிருப்பேன் சுவாமி.

ஒரு பர., அருள்., திரி. ஆமென்.