ஐந்தாம் செபம்

நித்திய பிரகாசத்தின் பலிப்பொருளாகிய சேசுவே! தேவரீருடைய திருப்பாடுகளின் விலைமதியாத பேறுகளால் நல்லோர் கரையேறத் தெரிந்துக்கொள்ளப்படுவதையும், தீயோர் தங்கள் அக்கிரம மிகுதியால் சபிக்கப்பட்டு பெருந்திரளாய் நரகத்தில் தள்ளப்படுவதையும் உமது தெய்வீக ஞானத்தின் தூரதிருஷ்டியால் கண்ட பொழுது நம்பிக்கையற்றவர்களும், முழுவதும் கைவிடப்பட்டவர்களும், நிர்ப்பாக்கியருமான அந்தப் பாவிகளுடைய சேதத்திற்கு இரங்கின உமது நிகரில்லாத காருண்யத்தினால் நீர் அனுபவித்த துக்க வியாகுலத்தை நினைத்தருளும் சுவாமி. ஆ, என் ஆண்டவரே! உம்மோடுகூடச் சிலுவையில் அறையுண்ட நல்ல கள்ளனைத் திருக்கண் நோக்கி நம்மோடுகூட இன்றே பரகதியிலிருப்பாய் என்று திருவுளம்பற்றின அந்த தயாள இரக்கத்தை என் மரண வேளையில் என் ஆத்துமத்தின் மேலும் செலுத்தும்படி உம்மை மன்றாடுகிறேன் சுவாமி.

ஒரு பர., அருள், திரி. ஆமென்.