ஆறாம் செபம்

மகா அன்புக்குப் பாத்திரமான இராஜாவாகிய சேசுவே! தேவரீர் ஓர் கள்ளனைப்போல் அவமானமாய்ச் சிலுவையில் அறையுண்டு சிலுவையோடு உயர்த்தப்பட்டு உமது சிநேகிதர், உறவினர்களாலும் கைவிடப்பட்டு உமது திருத்தாயார் அன்றி வேறு ஓர் ஆறுதலும் இல்லாதிருக்கையில் மிகுந்த துக்க வியாகுலத்தோடு சிலுவை அடியில் நிற்கிற உமது திவ்விய தாயை நோக்கி: அம்மா, இதோ உன் மகன் என்று அருளப்பரை உமது மாதாவுக்குப் புத்திரனாகக் கையளித்தபொழுது உமக்கு உண்டாயிருந்த துக்க மிகுதியை நினைத்தருளும் சுவாமி. ஆ, என் திவ்விய இரட்சகரே! அத்தருணத்தில் உமது திருத்தாயாருடைய ஆத்துமத்தில் ஊடுருவின வாளைப் பார்த்து என்மேல் இரங்கி என் ஆத்தும சரீரத்தில் அனுபவிக்கிற துன்பம் உபாதைகளிலும், விசேஷமாய் நான் சாகிற தருணத்திலும் எனக்கு ஆறுதல் வருவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி.

ஒரு பர., அருள்., திரி. ஆமென்.