பதினோராம் செபம்

அளவறுக்கப்படாத கருணா சமுத்திரமான சேசுவே! தேவரீருடைய வயிற்றிலும் எலும்பிலும் ஊடுருவின காயங்களின் நிர்ப்பந்த வேதனைகளை எல்லாம் நினைத்தருளும் சுவாமி. ஆ, எனது கர்த்தரே! பாவ பாதாளத்தில் விழுந்துகிடக்கும் நிர்ப்பாக்கியனான என்னைக் கைதூக்கி தேவரீருடைய பயங்கர கோபாக்கினிக்கு எதிரே நிற்க அபாத்திரமான என்னை அந்த கோபாக்கினி தனியும் மட்டும் உமது திருக்காயங்களில் மறைத்து வைத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி.

ஒரு பர., அருள்., திரி. ஆமென்.