திரித்துவ திருநாளன்று சொல்லத்தகும் செபம்.

சர்வவல்லமையுள்ள நித்திய கடவுளே! மெய் விசுவாசத்தைப் பற்றிக்கொண்டு மகிமை பொருந்திய நித்திய திரித்துவத்தை அறிக்கையிடவும், வல்லமை பொருந்திய திவ்விய மகத்துவத்தை ஏகத்துவமாக வணங்கவும் உமது அடியாராகிய எங்களுக்குக் கிருபை செய்திருக்கிறீரே.

இந்த விசுவாசத்திலே எங்களை உறுதிப்படுத்தி, இதற்கு விரோதமான யாவற்றிற்கும் எப்பொழுதும் எங்களை விலக்கிக் காப்பாற்ற வேண்டுமென்று சதாகாலமும் ஒரே கடவுளாகச் சீவித்து அரசாளுகிற உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம்.

ஆமென்.