உயிர்த்தெழுந்த திருநாளன்று சொல்லத்தகும் செபம்.

சர்வவல்லமையுள்ள பரம தகப்பனே, உம்முடைய ஏக சுதனாகிய இயேசு கிறிஸ்துவினால் மரணத்தை செயித்து நித்திய சீவ வாசலைத் திறந்தீரே!

எங்களுக்கு முன் செல்லும் உமது விசேஷித்த கிருபையினால எங்கள் மனதில் நல்விருப்பங்களை யுண்டுபண்ணுகிறது போல, இடைவிடாமல் துணை நிற்கும் கிருபையினால் அவ்விருப்பங்கள் நற்கிரியைகளாய்ப் பயன்படும்படி கிருபைசெய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

நாள்தோறும் நாங்கள் பாவத்துக்குச் செத்து, அவருடைய உயிர்த்தெழுதலின் சந்தோஷத்தினால் என்றும் அவரோடு சீவிக்க, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக என்றென்றைக்கும் சீவித்து அரசாளுகிற எங்கள் இகட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்த் தாழ்மையோடே உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம்.

ஆமென்.