வைத்திய ஊழியத்திற்காக செபம்.

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது பிரிய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுஷருக்குண்டான சகல வியாதிகளையும் குணமாக்கி, நன்மை செய்கிறவராகச் சுற்றித் திரிந்தாரே. நமக்குள்ளும் விசேஷமாய் நம்மூரிலுள்ள வைத்தியசாலைகளில் வேலை செய்வோருக்குள்ளும் இந்த ஊழியம் நிலைபடச் செய்தருளும். நோயாளிகளுக்குச் சுகத்தையும், சந்தோஷத்தையும், ஆன்ம சுகத்தையும் கட்டளையிட்டருளும்.

வைத்தியர்களுக்கும் பராமரிக்கும் நேஷ்மாருக்கும், ஞானத்தையும் அநுகூலத்தையும் பொறுமையையுங் கொடுத்தருளும். பாடுகளை நீக்கி உமது அன்பின் நோக்கத்தை விருத்தி செய்யப் பிரயாசப்படும் யாவர் மேலும், உமது ஆசீர்வாதம் தங்கவேண்டுமென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்ளுகிறோம்

ஆமென்.