நோயாளிகளுக்காக செபம்.

ஜீவனையும் சுகத்தையும் அருளுகிற சர்வ வல்லமையுள்ள பிதாவே, நோயாளரையும், கஷ்.டப்படுவோரையும், விசேஷமாய் எங்கள் செபங்களில் நினைப்பூட்டப் படுகிறவர்களையும், கிருபையாகக் கண்ணோக்க வேண்டுமென்று பணிந்து கேட்கிறோம்.. உமது தயவுள்ள சித்தத்தின்படி வியாதிஸ்தருக்கும், அவர்களைப் பராமரிக்கிறவர்களுக்கும் தேவரீர் கருணையளித்தருளும். உமது ஆசீர்வாதத்தினால் அவர்கள் தேகத்திலும், மனத்திலும் பூரண சுகம் பெற்று உமது பரிசுத்த சபை முன் உமக்கு நன்றியறிதலுள்ள துதிகளைக் கூற, எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூலம் கிருபை செய்தருளும்.

ஆமென்.