பிள்ளைகளைப் பரிபாலித்துப் போதிக்கும்படி உமது சபைக்குக் கட்டளையிட்ட சருவ வல்லமையுள்ள எங்கள் பரம தகப்பனே, நான் உனக்கு வெளிப்படுத்தும் வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக; அவைகளைக் கருத்தாய் உன் பிள்ளைகளுக்குப் போதிப்பாயாக என்று வெளிப்படுத்தினீரே. அறிவையுணர்த்தி ஞானத்தைப் போதிக்கும் உபாத்திமாரை (ஊழியக்காரரை) தருவீராக. சமுகமளிக்கும் பிள்ளைகள் வினாவிக் கற்றுக் கொள்ளவும், சத்திய அறிவினால் நிரப்பப்படவும், தங்கள் ஆயுள் பரியந்தம் உம்மைவணங்கி சேவிக்கவும், கிருபை அளிக்கும்படி எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலம் உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.