7. சமாரியப் பெண்ணுடன் சம்பாஷித்து, இரட்சகர் புன்று விளம்பி அரசன் மகளைக் குணமாக்குதல்.

இயேசுவே உலகை மீட்கும் இரட்கர் புன்று காட்ட, 
நேசமாய் சமாரியாவின் நீர்தரு கணிகைக் கோதி, 
ஆசை கொண் டும்மைத்தேடி, அழைத்திடும் அரசனீன்ற 
நேசமாம் சேயை மீட்கும் யேசுவே அருள் செய்வீரே.