26. இயேசுவை சிலுவையில் அறைந்ததின்பேரில்

தருவதாஞ் சிலுவை தன்னைத் தரைதனில் கவிழ்த்துயூதர் 
மிருதுவா வுமதுமேனி, வேதனையாலே நோகப் 
பருமிருப் பாணிகொண்டு பாதகரடித்திறுக்கத் 
திருக்கை கால்விரித்துயீய்ந்த யேசுவே அருள் செய்வீரே