23. சிலுவையுடன் இரண்டாம் முறை விழுதல்.

விரைவினி லும்மைக்கொல்ல வேதனே யூதர் கூடிப் 
பறைமுரசடித்துக் கொண்டு, பகைவர்கள் ஒருங்கு கூடிக் 
குரைகடலொலிபோல் வெம்பிக், கோபமாய் இழுத்துச் செல்ல 
தரையினிற் சிலுவையோடு இரண்டாந்த ரம் வீழ்ந்தீரோ.