இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

22. முள்முடி சூட்டியதின் பேரில்

முறிந்தநாற் காலியொன்றில், முதல்வனே உம்மைவைத்து, 
செறிமிகுந் திகிரித்தண்டை, செங்கோலாய்க் கரத்துக்கீய்ந்து 
நெரிந்தவோர் காரைக்கொப்பை, நிஷ்ரூரர் முடியாய் வைத்து 
இருத்திட அடிகள்பட்ட இயேசுவே அருள்செய்வீரே.