21. கற்றூணில் கட்டி கசைகளால் அடித்ததின்பேரில்

தீரமாய்ப் பிலாத்தூ சென்போன் செப்பிய மொழியைக் காட்டி 
கோரமாய் யூதரும்மை, கொண்டுபோய் தூணில் கட்டி 
வீரமாய் ஆறுபேர்கள், கூடி மெய்யினி லடிக்க, 
இரத்தச் சோரியில் விழுந்த யேசுதுணை அருள் செய்வீரே.