19. இயேசு பிடிபட்டதின் பேரில்

மட்டில்லா இயேசுநாதர் மலர்செறி தைலத்தோப்பில் 
எட்டியே யூதாஸ் வந்து, இட்டமாய் நின் முகத்தில், 
முட்டியே காட்ட யூதர், முடுகியே வளைந்து உம்மை, 
கட்டியே அடிக்க நின்ற, கர்த்தனே அருள் செய்வீரே.