இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

18. பூங்கா தியானத்தின் பேரில்

பூவினி லாதமேவாள் புரிந்திடும் பவத்தைப் போக்க 
நாவினால் சொல்லொண்ணாத நவிலருந் துயரத்தோடே 
காவினில் பிதாவைவேண்டி, களைத்து நீர், சோரிசிந்தி, 
மேவியே விழுந்த இயேசு விமலனே அருள்செய்வீரே.