11. இலாசறசை உயிர்ப்பித்தல்

சிறந்திடு முமது ஞான, தேவ அற்புதத்தின் தன்மை , 
அறந்திகழ் சீடர் காண, அன்பனாம் இலாசறென்போன், 
இறந்தபின் நாலாம் நாளில், ஏகியே கிடங்கு தன்னைத் 
திறந்தபின் உயிர்கொடுத்த, இயேசுவே அருள் செய்வீரே.