19. பூசை முடிந்து குரு ஆசீர்வாதம் கொடுக்கிறபோது


உலகம் முடிந்தபின் மரித்தவர்களெல்லாரையும் அவரவர் ஆத்தும சரீரத்தோடே எழுப்பி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் சுதனாகிய சர்வேசுரன் மகா மகிமைப் பிரதாபத்தோடு எழுந்தருளி வந்து அவரவர் செய்த பாவ புண்ணியங்களை அனைவருக்கும் அறியப்பண்ணி அளவற்ற நீதியால் தமது இடது பாரிசத்திலிருக்கிற பொல்லாதவர்களைச் சபித்து ஆத்தும சரீரத்தோடே நரகத்திலே தள்ளி , மட்டற்ற தயவால் தமது வலது பாரிசத்திலிருக்கிற நல்லவர்களுக்கு ஆசீர்வாதங் கொடுத்து, ஆத்தும சரீரத்தோடு அவர்களை மோட்ச இராச்சியத்துக்குக் கூட்டிக்கொண்டு போவாரென்று நினைத்துக்கொள்.

சுவாமி! தேவரீராலே தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குள்ளே நாங்களும் ஒருவராயிருந்து தேவரீருடைய பரிபூரண ஆசீர்வாதமடைந்து நித்திய காலமும் உம்மைப் போற்றிப் புகழ்ந்து இறைஞ்சித் தொழுது தோத்திரம் பண்ண எங்களுக்கு அநுக்கிரகம் தந்தருள வேணுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். 

ஆமென்.