© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பூண்டி புதுமை மாதாவிடம் ஜெபம்

பூலோகம் போற்றும் புனிதத் தாயே! என்றும் வாழும் பரிசுத்த கன்னிகையாய் இருக்கின்ற பூண்டி மாதாவே, நோய்களால், துன்பங்களால், மனவேதனைகளால் கஷ்டப்படும் உம் மைந்தர்களாகிய எங்களை கண்ணோக்கிப் பாருமம்மா. உமது வல்லமையுள்ள மன்றாட்டால் எங்களை குணமாக்கியருளும் தாயே.

ஜென்ம மாசில்லாத மாதரசியே! எங்களுக்கு தேவையான அனைத்து நலன்களையும், வரங்களையும் உம் அன்பு திருமகன் இயேசுவிடமிருந்து எங்களுக்காக பரிந்துபேசி பெற்று தந்தருளும் அன்னையே!

ஆமென்.