இந்தியாவுக்காக ஜெபம்

நித்தியா பிதாவே! சகல மனிதரையும் படைத்த கர்த்தாவே! எங்களைச் சுற்றி இருக்கும் எங்கள் தேசத்தாரை கிருபையோடு பார்த்தருளும்.

உம்முடைய திவ்விய குமாரன் சிலுவை மரத்தில் இவர்களுக்காகவும் பாடுப்பட்டு திரு இரத்தத்தை சிந்தியிருந்தும், அவர்கள் இந்த இரத்தத்தின் பலனை அடையாதவர்கள்போல இருப்பதெப்படி?

இத்தனை கோடி ஜனங்களின் பேரில் இரக்கமாய் உமது கண்களை திருப்பி அவர்களுக்கு இரட்சண்ணிய பாதையை திறந்தருளும்படி மன்றாடுகிறோம்.

உமது திருக்குமாரன் போதித்த சத்தியங்களை இவர்களும் அங்கீகரிக்கும்படி இவர்கள் ஆத்துமத்தை ஞான வெளிச்சத்தால் நிரப்பியருள கெஞ்சிக் கேட்கிறோம்.

இந்தத் தேசத்தாரேல்லாம் தேவரீருக்கு மட்டும் ஆராதனை செலுத்தி ஒரே மேய்பனுக்கு கீழ்ப்படிந்திருப்பதைப் பார்ப்பதெப்போது?

கருணை நிறைந்த பிதாவே! இந்த தேசத்தாரின் பாவ தோசத்ததைப் பாராமல் திருச்சபையின் ஜெபங்களை நோக்கி உமது கிருபையின் இரக்கத்தை அவர்கள் பேரில் பொழிந்தருள்வீராக.

அவர்களும் திருச்சபையின் பிள்ளைகளாகும்படி தேவரீரைக் கெஞ்சி மன்றாடுகிறோம் ஆண்டவரே.

ஆமென்.