நல்ல ஆலோசனை மாதாவை நோக்கி செபம்.

மனுவுருவான இறை வார்த்தையின் அன்னையாக இருக்க முடிவில்லா ஆலோசனையால் தெரிந்து கொள்ளப்பட்ட மிகவும் மகிமை உள்ள கன்னியே, திருவருளின் வாய்க்காலே, பாவிகளின் தஞ்சமே, உம் ஊழியர்களில் மிகவும் தகுதியற்ற எளியேனுக்கு நீர் இந்த மண்ணுலகில் ஓர் ஆலோசனை அன்னையாகவும், வழித் துணையாகவும் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். உம் திருமைந்தனுடைய மிகவும் விலையேறப் பெற்ற திரு இரத்தத்தைக் கொண்டு எம் பாவங்களுக்கு மன்னிப்பையும், என் மீட்பைப் பெறத் தேவையான வழிகளையும் எனக்காகக் கேட்டு  தந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம் புகழ் பரவவும், விண்ணரசு தலைத்தோங்கவும் செய்தருளும் தாயே.

ஆமென்.