அர்ச்சியசிஷ்ட சிந்தாத்திரை மாதா ஜெபம்.

தந்தையே இறைவா! இந்நாட்களில் பயணம் செய்யும் என்னை உம்முடைய அன்பின் பாதுகாப்பில் வைத்தருளும். ஆபத்துகளிலிருந்தும் குறிப்பாக இயந்திர கோளாறுகளிலிருந்தும், இயற்கை சீற்றங்களிலிருந்தும் என்னை பாதுகாத்தருளும். நீர்நிலைகள், காடுகள் வழியாகவும், மலைகள் மீதும் பயணம் செய்யும் போது விவேகத்துடனும், ஞானத்துடனும் பயணம் செய்ய அருள்புரியும்.

இயற்கையை மதித்து நடக்க கற்பியும். இதன் மூலம் இயற்கையின் சக்தியை ஒருபோதும் பழிக்காமலும், அவமதிக்காமலும் இருப்பேனாக. நான் பாதுகாப்புடன் வீடு திரும்பி செல்லும் போது உம்முடைய அருள் வரங்களை நினைத்துப் பார்த்து நன்றி உள்ளவனாக இருப்பேனாக. என்னைப் போன்று பயணம் செய்யும் அனைவருக்கும் உம்முடைய பாதுகாப்பும், அரவணைப்பும் கிடைப்பதாக. இம் மன்றாட்டுகள் எல்லாம் எங்கள் அர்ச்சியசிஷ்ட சிந்தாத்திரை அன்னை வழியாக உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென்.