கடல் தொழிலாளர்களுக்கான செபம்

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, முன்னால் பெரும் வெள்ளத்தில் தண்ணீரில் மிதந்த நோவாவின் பெட்டகத்தை ஆசிர்வதிக்க நீர் தயை புரிந்தது போல இதோ என் மன்றாட்டுகளுக்கு இரங்கி இந்த கலத்தில் (படகு, தோனி, கப்பல்) பயணம் செல்பவர்கள் அனைவரையும் உம வலது திருக்கரத்தால் ஆசிர்வதியும்.

கடல்மேல் நடந்து சென்று புனித இராயப்பருக்கு உம் வலது கரத்தை நீட்டி செய்தது போல இவர்களுக்கும் ஆதரவு கொடுத்தருளும்.

விண்ணகத்தினின்று உம் வானதூதர்களை அனுப்பி இந்த கலத்தில் (படகு, தோனி, கப்பல்) உள்ள யாவையும் எல்லா விதமான ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்படிச் செய்யவும்.

எல்லா எதிர்ப்புகளையும் அகற்றி உம் ஊழியர்களை எப்பொழுதும் அவர்கள் விரும்பும் துறைமுகத்துக்கு பாதுகாப்பாய் சேர்த்து, அவர்கள் தங்கள் தொழில்களை எல்லாம் சரிவரச் செய்து முடித்த பிறகு தக்க காலத்தில் தங்கள் சொந்தக் கரைக்கு மகிழ்ச்சியாய் திரும்பி வந்து சேரத் தயை புரிவீராக.

இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் தூய சிந்தாத்திரை அன்னை வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.

(1-பர.,1-அருள்.,1-திரி)

அர்ச்சியசிஷ்ட சிந்தாத்திரை மாதவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.