குழந்தை இயேசுவுக்கு செபம் 2.

உமது மாதவினாலே எலிசபெத்தம்மாளை சந்தித்து உமது ஸ்தானதிபதியான அருளப்பரை இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பி தமது தாய் உதிரத்திலே அவரை அர்ச்சிக்கப்பண்ணின மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே; உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.