ஆராதனைப் பிரகரணம் 22.

எங்கள் ஆத்துமகங்களின் அன்புக்குரிய பத்தாவாகிய இயேசுவே! தேவற்கருணையை வாங்குகிற சமயத்திலே முதலாய்த் தேவரீர்பேரில் அநேகரிடத்தில் தோண்றிய பக்தி குறைவு, அசதி அசட்டைத்தனத்துக்குப் பரிகாரமாக, அடியேன் பக்தி மிகுதியாற் பரவசமான திருக்கன்னியரின் பற்றுதலுள்ள செபத் தியானங்களையும், அத்தியந்த நேசத்தையும் தேவரீர்க்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.