ஆராதனைப் பிரகரணம் 21.

பூரண பரிசுத்த கடவுளாகிய இயேசுவே! அத்தியந்த பயபக்தியுடனே தேவரீரை ஆராகிக்கிறேன். தேவரீருக்கு மிகவும் பிரிய சுகந்த புண்ணியமாகிய கற்புக்கு விரோதமாய் மனுமக்களால் இதுவரைக்கும் செய்யப்பட்ட சகல பாவ தோஷதுரோகங்களுக்குப் பரிகாரமாக, சந்நியாசிகளுடைய மாறாத தவ விரதத்தையும், பரிசுத்த கன்னியர்களுடைய மேரை மரியாதை ஒடுக்க வணக்கத்தையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.