ஆராதனைப் பிரகரணம் 23.

சகல தேவதூதர்களாலும் மனிதர்களாலும் அனந்த பக்தியுடனே சிநேகிக்கப் படுவதற்குரிய திவ்விய இயேசுவே! தேவரீரை என் முழுஇருதயத்தோடே சிநேகித்து துதித்து ஆராதிக்கிறேன். துஷ்ட கலாபக்காரரும் கொலைகாரரும் உம்முடைய தேவாலயங்களுக்கு அஞ்சாமல், அவைகளின் சுத்திகரத்துக்குக் கேடாக அவைகளில்தானே நீதிமான்களின் மாசற்ற இரத்தத்தைச் சிந்தின குரூயஅp;ரத்துக்கும் தேவரீர் உம்முடைய கோவில்களில் வறுமை தரித்திரமாய் மனிதரால் நடத்தப்பட்ட அசட்டைத் தனத்துக்குப் பரிகாரமாக, முத்திப்பேறுபெற்ற சகல புனிதர்களின் நேச பக்தியுள்ள ஆராதனையையும், வேத கலாபங்களில் உம்முடைய பிரியமுள்ள ஊழியர் சந்தோஷத்துடனே பட்டவாதை, சிறுமை, தரித்திர துன்பங்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.