ஆராதனைப் பிரகரணம் 20.

சம்மனசுக்களின் திவ்விய அப்பமென்னப் பட்ட இயேசுவே! தேவரீர் மனுமக்களுக்கு திவ்விய போசனமாக உம்மைத் தந்தருளினதைப்பற்றி நன்றியறிந்த மனதோடே தேவரீரைத் துதித்து ஆராதிக்கிறேன். தேவரீர் கற்பித்த ஒருசந்தி சுத்தபோசனைக் கட்டளைகளுக்கு விரோதமாய் மனிதர் கட்டிக்கொள்ளுகிற போசனப்பிரியம், லாகிரி முதலிய பாவங்களுக்குப் பரிகாரமாக, உம்முடைய பரிசுத்த முனிவர் தபோதனர்களின் மட்டசனத்தையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.