ஆராதனைப் பிரகரணம் 19.

அடியோர்களுக்காக உம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கிறதிலே பிரியப்படுகிற நித்திய குருவே! நன்றியறிந்த மனதுடனே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருடைய திருமறைக் குருக்களுக்கும் துறவியர், முனிவர், தபோதனர்களுக்கும், கன்னியர்களுக்கும் செய்யப்பட்ட நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, உமது மாறாத பொறுமையையும், சத்திய வேதபோதகர் அனைவரிலும் அப்போஸ்தலிக்குச் சற்குருக்களிலும் விளங்கிய உண்மையான பக்தியுள்ள தைரியப் பற்றுதலையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.