ஆராதனைப் பிரகரணம் 18.

தாழ்ச்சியால் மறைந்திருக்கிற தெய்வீகமாகிய இயேசுவே! தேவரீர் உமது பிரதாப சோதிக்கதிர்களை மறைக்கிற திவ்விய நற்கருணையில் உம்மை அத்தியந்த விசுவாசத்துடனே ஆராதிக்கிறேன். தேவரீருக்கு ஏற்காத துரோகங்கiளாகிய சண்டை சச்சரவுகளுக்கும், பெருமை சிலாக்கியத்தின் பேரிலுள்ள பொறாமை, சச்சரை, காய்மகாரத்துக்கும், சகல துர்மாதிரிகைகளுக்கும் பரிகாரமாக, பரிசுத்த துதியர்களின் தாழ்ச்சி ஒடுக்க சிரவணத்தையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.