ஆராதனைப் பிரகரணம் 17.

அளவில்லாத மகிமையுடைத்தான கடவுளாகிய இயேசுவே! உம்முடைய பிரதாப மகத்துவத்துக்குச் சரியான ஆராதனை நமஸ்காரத்தைத் தேவரீருக்குச் செலுத்த மனுமக்களாற் கூடாதாயினும், என்னாலியன்ற மட்டும் மிகுந்த பயபக்தியோடே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருடைய திருநாமத்தைக் கொண்டு இடப்பட்ட பொய்யாணை, பொய்ச் சத்தியங்களுக்குப் பரிகாரமாக, அடியேன் வேதபாரகரும் மற்றச் சத்திய சாஸ்திரிகளும் உமக்குச் தோத்திரமாகச் செய்த அமிர்த பிரசங்கங்களையும், எழுதிய பக்தி நிறைந்த துதிகளையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.