ஆராதனைப் பிரகரணம் 16.

பரம தேவ பிதாவிடத்தில் அடியோர்களுக்காக மிகவும் மனுப்பேசுகிற மத்தியஸ்தராகிய திவ்விய இயேசுவே! மிகுந்த நன்றியறிந்த மனதுடனே தேவரீரை ஆராதிக்கிறேன். திருச்சபையில் யாதோர் அதிகாரம் பெற்றவர்கள் உம்முடைய தேவாலயங்களில் தேவரீருக்குச் செய்யப்பட்ட சங்கையீனமான அநாசாரங்களைத் திருத்தாமலும் கண்டியாமலும் விட்ட அசதி அசட்டைத் தனத்துக்குப் பரிகாரமாக, அடியேன் பரிசுத்த மறைஆயர்களும், சிரேஷ்ட குருக்களும் தேவரீருடைய ஊழியத்திற் கொண்ட அணுநுணுக்கமான கவனத்தையும், சுறுசுறுப்புள்ள விசாரப் பத்தியையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.