வாழ்க அரசியே!

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே,
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க!

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றும் மைக் கூவி அழைத்தோம்

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

ஆதலால் எமக்காய்ப் பரிந்துரைப்பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாராய்;

உம் திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவாய்.

கருணையின் உருவே, தாய்மையின் கனிவே,
இனிமைத் தருவே, கன்னி மரியே!

ஆமென்.