இயேசுவின் திருப்பெயரின் மன்றாட்டு மாலை.

ஆண்டவரே இரக்கமாயிரும் 2
கிறிஸ்துவே இரக்கமாயிரும் 2
ஆண்டவரே இரக்கமாயிரும் 2

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்

விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.

உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.

தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.

இறைவனின் திருமகனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

தந்தையின் பேரொளியாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

முடிவில்லா ஒளியின் சுடரான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

மகிமையின் மன்னரான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

நீதியின் கதிரவனான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

புனித கன்னிமரியாவின் மைந்தராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

அன்புக்குரிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

வியப்புக்குரிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

வல்லமையுள்ள இறைவனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

இறுதிக்கால தந்தையாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

பேராலோசனையின் தூதராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

ஆற்றல் மிகுந்த இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

பொறுமை நிறைந்த இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

கீழ்ப்படிதலுள்ள இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ள இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

கற்பை விரும்பும் இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

எங்களை அன்பு செய்யும் இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

அமைதியின் இறைவனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

உயிரின் ஊற்றாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

புண்ணியங்களின் மாதிரியான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

அன்பார்வம் கொண்ட இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

எங்கள் இறைவனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

எங்கள் அடைக்கலமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

வறியவரின் தந்தையாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

இறைமக்களுக்குக் கருவூலமான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

நல்லாயனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

உண்மை ஒளியாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

முடிவற்ற ஞானமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

அளவற்ற நன்மைத்தனமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

எங்கள் வாழ்வும் வழியுமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

வானத்தூதரின் மகிழ்ச்சியாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

குலமுதுவரின் அரசராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

இறைவாக்கினரின் ஞானமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

அப்போஸ்தலரின் ஆசிரியராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

நற்செய்தியாளரின் போதகராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

மறைச்சாட்சியருக்குத் திடமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

இறையடியார்களின் ஒளிவிளக்காகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

கன்னியரின் தூய்மையாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

புனிதர் அனைவரின் மணிமுடியான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

கருணை கூர்ந்து - எங்களை மன்னித்தருளும் இயேசுவே.

கருணை கூர்ந்து - எங்களுக்குச் செவிசாய்த்தருளும் இயேசுவே,-

தீமை அனைத்திலுமிருந்தும் - எங்களை மீட்டருளும் இயேசுவே,

பாவம் அனைத்திலுமிருந்தும்,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது சினத்திலிருந்து,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

பேயின் சூழ்ச்சியிலிருந்து,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

சிற்றின்பப் பற்றுதலினின்று,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

முடிவில்லா அழிவிலிருந்து,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது மனுவுடலேற்பின் மறைபொருளைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது பிறப்பைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது குழந்தைப் பருவத்தைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது தெய்வீக வாழ்வைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது உழைப்பைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

நீர் ஏற்படுத்திய நற்கருணையைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உம்முடைய வேதனைகளையும் பாடுகளையும் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது சிலுவையையும் கைநெகிழப்பட்ட நிலையையும் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உம்முடைய துன்ப துயரங்களைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது இறப்பையும் அடக்கத்தையும் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது உயிர்த்தெழுதலைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது விண்ணேற்றத்தைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,

உமது மகிழ்ச்சியையும் மகிமையையும் கண்ணோக்கி, - எங்களை மீட்டருளும் இயேசுவே,

இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் தயவாய் கேட்டருளும்.

செபிப்போமாக.
ஆண்டவரே! நீர் உமது அன்பில் நிலைத்திருக்கச் செய்பவர்களைப் பராமரித்து ஆள ஒரு போதும் தவறுவதில்லை. ஆகவே, உமது திருப்பெயரின் மீது நாங்கள் எப்பொழுதும் பயபக்தியும் அன்பும் கொண்டிருக்கச் செய்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்

ஆமென்.