திவ்ய நற்கருணை ஆசீர்: இது ஒரு கத்தோலிக்கத்தின் சிறந்த அடையாளம்!

இந்த அடையாளமும் மெல்ல மெல்ல பொழிவிழந்து வருகிறது....

“ இதோ உலகமுடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் “ மத்தேயு 28 : 20

எங்கே எப்படி நம்மிடத்தில் இருக்கிறார்? ஆலயத்தில் திவ்ய நற்கருணையில் நம்மோடு இருக்கிறார்.

கத்தோலிக்க திவ்ய நற்கருணை ஆசீர் எப்படி நடக்கும்? இப்போது அப்படி நடக்கிறதா? சிறு பங்குகளில்... கிராமங்களில் நடக்கலாம்... நகரங்களில்....???

சென்னையில் ஒரு முக்கியமான திருத்தலத்தில் நடந்த சுருக்கமான நற்கருணை ஆசீரைப்பாருங்கள்...

முதலில் ஆண்டவர் கதிர் பாத்திரத்தில் ஒரு அருட்தந்தையால் ஸ்தாபிக்கப்படுகிறார். அருகில் ஆசீர் நடத்தும் அருட்தந்தை நின்று கொண்டிருக்கிறார். ஆண்டவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை வணங்கவும் இல்லை...

உடனே திரு.பெர்த்மான்ஸ் பாடிய பாடலை அவர் குரலில் பாடுகிறார்.. (நிறைய அருட்தந்தையர்களுக்கு அவர்கள் வாய்ஸில் பாடுவதை விட அவரின் வாய்ஸில் பாடவே ஆசைப்படுகிறார்கள்...)

“விண்ணப்பத்தைக் கேட்பவரே... என் கண்ணீரைக்காண்பவரே.... பாடிவிட்டு.. ஆண்டவர் இப்போது உங்கள் நோய்களை சுகமாக்குகிறார்... என்று “ Praise the Lord “ “ அல்லேலுயா “ என்று சத்தமாக பிரிவினை சபையினர் போல் ஜெபிக்க ஆரம்பித்துவிட்டார். 

“ஆண்டவர் கட்டுகளை அகற்றுகிறார்“ “ உடைத்துப்போடுகிறார் “ “ கைகளை அசையுங்கள் “ “ கரங்களை தட்டுங்கள் “ என்று பேச ஆரம்பித்துவிட்டார்.. மக்களும் அவர் சொல்லியதையெல்லாம் செய்கிறார்கள். ஏனென்றால்  நோய்கள் தீரவேண்டும் அல்லவா? 

இப்போது கேள்வி! ஆண்டவர் என்ன கிளினிக்கா நடத்துகிறார்...? அவருக்கு நம் நோய்களை குணமாக்குவது மட்டும்தான் வேலையா ? எப்பபார்த்தாலும் ஆண்டவரை கதிர்பார்த்திரத்தில் ஸ்தாபகம் செய்துவிட்டு “நோய்களை குணமாக்குங்கள். கட்டுகளை அவிழ்த்துப்போடுங்கள் “ என்று ஒரே ஆர்டர் போட அவர் என்ன நம் வீட்டு வேலைக்காரரா?

டாக்டரைப் பார்க்க சென்றால் கூட காத்திருக்க வேண்டும். அவருக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.. மெல்ல நம் பிரச்சனைகளை சொல்ல வேண்டும்… ஆண்டவரிடம் பேசுவது போல் டாக்டரிடம் பேசிப்பாருங்கள் “ முதல்ல வெளியே போ.. கத்தாதே “ என்று பதில் வரும்…

MBBS படித்த டாக்டருக்கு கிடைக்கும் மரியாதைக் கடவுளுக்கு உலக மருத்துவருக்கு கிடைப்பதில்லை…

(ஆண்டவரையன்றி நம்மை யார் குணமாக்குவார்.. ஆனால் அதை நாம் எப்படி கேட்க வேண்டும்…? அதற்கும் உரிய வழிமுறைகள் உள்ளன)

பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த கடவுள், நமக்காக இரத்தம் சிந்தி நம்மை மீட்ட கடவுள்.. இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்ன கடவுளுக்கு அவ்வளவுதான் மரியாதையா? ஒரு ஆராதனை கூட செய்யப்படாமல் ஒரே பெட்டிசன், எப்பபார்த்தாலும் பெட்டிசன்.. நம்ம பக்தி வட்டம் மிகவும் குறுகி விட்டதா ? அல்லது குறுகிய வட்டத்திற்குள் சென்று விட்டதா ஒரே சுய நலபக்திதான் எங்கும் காணப்படுகிறது…

சரி அங்கு நடந்த ஆசீர்வாதத்திற்கு செல்வோம். பிறகு குணமாக்கும் வழிபாட்டுக்குப் பின் மாண்புயர் கீதம் பாடிவிட்டு ஆசீர்வாதம் முடிந்து திருப்பலி ஆரம்பமாகிவிட்டது.. நல்ல வேளை இங்கு மாண்புயர் கீதமாவது பாடப்பட்டது சில இடங்களில் அதுவும் இல்லை..

ஆலயம் தவிர்த்து பொது இடங்களிலோ அல்லது அன்னையின் கெபியிலோ திவ்ய நற்கருணை ஆண்டவர் ஸ்தாபிக்கப்பட்டால்.. முதலில் அனைவரும் முழந்தால் படியிட்டு “ நித்திய ஸ்திக்குரிய.. “ முன்று முறை பாடி அவரை ஆராதிக்க வேண்டும்.. ஆலயத்தினுள்ளும் இது நடந்தாலும் நல்லதுதான்…

நம்முடைய கத்தோலிக்க ஆசீர்வாதம் எப்படி இருக்கும்…???

குருவானவர் நற்கருணை ஆண்டவரை ஸ்தாபித்தவுடன்.. நாம் அனைவரும் முழந்தால் படியிட்டு பாடல் குழுவினரோடு பாடல்கள் பாடுவோம்.. குருவானவர் ஆண்டவருக்கு தூபம் காட்டுவார்… மான்புயர் கீதத்திற்கு முன்னால் குருவானவர் நீண்ட அங்கி தரிப்பார்.. பின்பும் தூப ஆராதனை.. அதன்பின் குருவானவர் ஆண்டவர் இருக்கும் கதிர்பாத்திரத்தை தொட மேலும் ஒரு சிறிய புனித ஆடையை போர்த்திக்கொண்டு அமைதியாக அனைவருக்கும் ஆண்டவரை தூக்கிக் காட்டி ஆண்டவரின் ஆசீரை வழங்குவார்..

இதற்கு இடையில் நற்செய்தி வாசகம் பிரசங்கம் நடைபெறும்…

அதே போல திருமணி ஆராதனையும் கத்தோலிக்கத்தின் மிகச்சிறந்த வழிபாடு…

ஆண்டவரை ஸ்தாபகம் செய்துவிட்டு பிரிவினை சபையினர் போல் ஜெபிப்பது என்று நிறுத்தப்படும்…?? நம் கத்தோலிக்கத்தின் அடையாளங்கள் எப்போது மறுபொழிவு பெரும் ?? என்று தெறியவில்லை .. அதற்காக நம் ஜெபங்கள் அதிகம் தேவை… ஆண்டவரை அதட்டுவது, கூச்சல் போடுவது நிறுத்தப்பட வேண்டும்..பிரிவினை சபையினரின் பாணி ஜெபபோதை தீர வேண்டும். இதற்காக நாம் ரொம்பவே மன்றாட வேண்டும்.. அதிகமான ஜெபமாலைகள் ஒப்புக்கொடுக்க வேண்டும்…

நம் கத்தோலிக்க பாரம்பரியம்தான் நம்மையும், நம் திருச்சபையையும் இந்த உலகையும் காப்பாற்றும்….இந்நிலை தொடர்ந்தால் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !