கத்தோலிக்க பாரம்பரியம்

* ''கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியம் " Deposit of faith (விசுவாச சத்தியங்களின் இருப்பு) எனப்படுவது, சேசுநாதர் சுவாமியின் போதனைகள்.

* சேசுநாதர் சுவாமியிடம் கேட்டவற்றையே எல்லா அப்போஸ்தலர்களும் போதித்ததால் கடைசியாக மரித்த அப்போஸ்தலரான அர்ச். அருளப்பரின் போதனையோடு திருச்சபையின் பாரம்பரியம் நிறைவுற்றது. (Completion of the Deposit of faith) - அதாவது ஒரு புது கருத்தை புகுத்தவோ ஏற்கெனவே அப்போஸ்தலர்கள் போதித்தவற்றை மாற்றவோ, நீக்கவோ முடியாது. 

* எக்காலத்திற்கும் இந்த 'விசுவாச சத்திய இருப்பை ' (Deposit of faith) காப்பாற்றி, மக்களுக்கு அதனை உரியபடி போதிக்கவே, சேசுநாதர் சுவாமி அர்ச். இராயப்பர் மேல் தம் திருச்சபையை ஸ்தாபித்தார். 

* திவ்விய இஸ்பிரித்து சாந்து தேவமாதா பேரிலும் அப்போஸ்தலர்கள் பேரிலும் எழுந்தருளிய போது, 28 AD யில் திருச்சபை செயல்பட துவங்கியது.

(* வருடக்கணக்கீட்டில் நிகழ்ந்த ஒரு பிழையால் நமதாண்டவர் பிறந்த நாள் 25, டிசம்பர் கி.மு. 5 என வருவதால் அவர் சிலுவையில் மரித்து, உயிர்த்த வருடம் கி.பி. 28. என வரும்.)

* 28ADல் துவங்கி கத்தோலிக்க திருச்சபை - அதன் திவ்விய பலிபூசையையும், மற்ற தேவத்திரவிய அனுமானங்களையும், கத்தோலிக்க பாரம்பரியத்தையும் அளித்து செயல்பட்டு வருகிறது. கத்தோலிக்க பாரம்பரியமே புத்தகங்களை தேர்ந்தெடுத்து பைபிள் உருவாக்க உதவியது.

* அர்ச். ஜெரோம் 404ADயில் தம் (Latin Vulgate) பைபிள் மொழிபெயர்ப்பை முடித்த பின்புதான், நாம் இன்று அறிந்துள்ள வடிவில் 'பைபிள்' - வேதாகமம் 405ADயில் உருவானது. 1500 AD - யில் தான் அச்சடிக்கப்பட்டு, பலரும் அறிய முடிந்தது.

* 1500 AD முதல் பலரும் தங்கள் இஷ்டப்படி 'பைபிளை' விளக்க முற்பட்டதால் புரோட்டஸ்டாண்டு இயக்கங்கள் தோன்றின. 

* பாப்பரசரின் "சாதாரண போதக அதிகாரம்" (Ordinary Infallible Magisterium), 'அவருக்கு முந்திய பாப்பரசர்களின் பாரம்பரிய போதனைக்கு பிரமாணிக்கமாய் அவர் போதிப்பதிலிருந்து தான் பெறப்படுகிறது. இவ்வாறு அப்போஸ்தலர்களின் போதனையை நாம் பெறுகிறோம்.

* பாரம்பரியத்திற்கு விரோதமான ஒரு புதிய கருத்தை போதிக்க பாப்பானவருக்கு அதிகாரம் இல்லை, அப்படி ஒருவர் போதித்தால் அது செல்லாது, அது நம்மை கட்டுப்படுத்தாது.

கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி வாழ்வது நமது கடமையாகும்.

"தேவமாதாவை சர்வேசுரனுக்கு அடுத்த நிலையில் வைத்து நேசிக்காமல், அவர்களை எதிர்த்துக் கொண்டு யாரும் மோட்சம் சேர முடியாது,'' என போதிக்கிறார்கள். அர்ச். பெர்னார்தீன், 13-ம் சிங்கராயர், 11-ம் பத்திநாதர், அர்ச். லூயிஸ்தே மோன்போர்ட் மற்றும் அர்ச். மாக்ஸிமிலியன் கோல்பே.

* இந்த அடிப்படை உண்மைகளை, 2-ம் வத்திக்கான் சங்கத்தை நடத்திய திருச்சபை அதிகாரிகள் பலர் ஏற்க மறுத்ததாலும், நமது பாவங்களினாலும், - இன்று தப்பறைகளும், தேவ துரோகங்களும், குழப்பங்களும் மலிந்து உள்ளன.

* நாம் இந்த விசுவாச நெருக்கடியில் தெளிவு பெற, ஒரு ஜெபமாலையாவது ஜெபித்து, தேவமாதாவின் உதவியை வேண்டுவோம்.