ரூத்தாகமம் - அதிகாரம் 03

 நோயேமியின் கற்பனை.

1. ரூத்தென்பவள் தன் மாமியிடந் திரும்பி வந்தபின்போவெனில் நோயேமி அவளை நோக்கி: என் மகளே நீ சுகமாயிருக்கும்படி நான் பார்த்துக் கொள்ளுவேன்; உனக்கு நன்மையுண்டாகும்படி முயற்சி செய்வேன்.

2. நீ போஸுடைய வேலைக்காரிகளோடு கூடி (வேலைசெய்தாயே) அந்தப் போஸ் நமக்குச் சொந்தக்காரன் தான். இன்று இராத்திரி அவன் களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.

3. ஆகையால் நீ குளித்து எண்ணெய் பூசி நல்ல சீலைகளை உடுத்திக் கொண்டு களத்திற்குப் போ. (அம்) மனிதன் புசித் துக் குடித்துத் தீருமட்டும் நீ அவன் கண்ணுக்கு எதிர்ப்படாதிருக்கவேண்டும்.

4. அவன் படுக்கப்போனபோது அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து அப்புறம்போய் அவன் கால் களின் மேல் மூடியிருக்கும் துப்பட்டியை ஒதுக்கி, நீயும் அங்கேயே படுத்துக் கொள்; பிறகு நீ செய்ய வேண்டிய தேதென்று அவனே உனக்குச் சொல்லுவான் என்றாள்.

5. அதற்கவள்: நீர் எனக்குச் சொன்னபடி எல்லாஞ் செயவேனென்று சொல்லி,

6. களத்திற்குப போய் மாமி தனக்குக் கற்பித்தபடி எல்லாஞ் செய்த னள்.

7. போஸ் உண்டு குடித்துச் சந்தோஷமாகி ஓர் அம்பாரங் கிட்டப் படுக்கப் போனதின்பின் இவள் சப்தம் போடாத படிக்கு வந்து அவன் கால்மாட்டுப் பக்கந் துப்பட்டியை ஒதுக்கிப் படுத்துக் கொண் டாள்.

8. நடு இராத்திரியிலே அவன் திடுக் கென எழும்பிப் பார்த்து தன் கால்மாட் டிலே ஒரு பெண் தன்னண்டையில் படுத்திருக்கிறதைக் கண்டு என்னமோ வென்று திகைத்துக் கலங்கினாள்.

9. நீ யார் என்று அவளைக் கேட் டான். அவள்: அடியாள் ரூத் என்பவளே. நீர் (எனக்குச்) சொந்தக்காரனாயிருப் பதால் அடியாள்மேல் உமது துப்பட்டியை விரியும் எனப் பிரதி கூறினாள்.

10. அவனோ: மகளே! நீ ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவளே, தரித்திரர் அல்லது திரவியவான்களான வாலிபர்களை நீ தேடிப் போகாததினால் உன் முந்தின நல்ல செய்கையைப் பார்க்கிலும் இப்போது நீ செய்ததே உத்தமம்.

11. ஆகையால் நீ பயப்பட வேண்டாம். பின்னும் நீ எனக்கு என்னென்ன சொல்லிக் கேட்டாலும் நான் அந்தப்படி செய்வேன்; ஏனெனில் என் கிராமத்திலே வசித்திருக்கிற சனமெல்லாரும் நீ புண்ணியவதி என்று அறிந்திருக்கிறார்கள்.

12. நான் உனக்கு உறவினன் என்பது மெய்தான், என்றாலும் என்னிலும் கிட்டின உறவினன் வேறொருவன் இருக்கிறான்.

13. இந்த இராத்திரிக்கு நீ சும்மாயிரு; நாளைக்கு அவன் சுதந்தர முறையைப் பற்றி உன்னை விவாகம்பண்ணச் சம்மதிப்பானானால் நல்ல காரியம் ஆச்சுது; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருப்பானானால் யாதொரு சந்தேகமின்றி நான் உன்னை விவாகம் பண்ணுவேனென்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிடுகிறேன், விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்.

14. அப்படி அவள் சூரியோதயம் வரைக்கும் அவன் கால்மாட்டிற் படுத்திருந்தாள். பின்னும் ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாமுன்னே எழுந்திருந்தாள்; போஸ் அவளை நோக்கி: நீ இங்கே வந்ததாக ஒருவருக்குந் தெரிவிக்க வேண்டாம் என்றான்.

15. அவன் மீண்டும் அவளை நோக்கி: நீ போர்த்திருக்கிற போர்வையை விரித்து இரண்டு கைகளிலும் பிடித்துக் கொள்ளென்றான். அவள் விரித்துப் பிடிக்க அவன் அதிலே வாற்கோதுமை ஆறு படி அளந்து போட்டு அவள்மேல் தூக்கிவிட்டான். அவள் அவற்றை எடுத்துக் கொண்டு பட்டணத்தில் நுழைந்து,

16. தன் மாமியிடத்தில் வந்தாள்; அவள் மகளே, என்ன சம்பவம்? என்று கேட்டதற்கு, மருமகள் அந்த மனுஷன் தனக்குச் செய்ததெல்லாம் அவளுக்கு விவரித்துச் சொன்னாள்.

17. ரூத் மறுபடியும்: அவர் என்னைப் பார்த்து: உன் மாமியிடத்திற்கு நீ வெறுமனே போகவேண்டாம் என்று சொல்லி, ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் பாரும்! என்று சொன்னாள்.

18. அப்போது நோயேமி காரியம் எப்படி முடிவாகுமோ என்று காணுமட்டும் பொறுத்திரு மகளே; ஏனெனில் அவன் சொன்னதை நிறைவேற்றாமல் விடமாட்டான் என்றாள்.