ரூத்தாகமம் - அதிகாரம் 04

 போஸ் ரூத் விவாகம்

1. இதனிடையே போஸ் பட்டணத் துத் தலைவாசலுக்குப் போய் அங்கே உட்கார்ந்தான். உட்கார்ந்திருக்கையில், அவன் முன் சொல்லியிருந்த அந்த உறமுறையான் அந்த வழியே வருகிற தைக் கண்டு, அவன் பேர் சொல்லிக் கூப்பிட்டு இங்கு வந்து சற்று நேரம் உட் காருமென்றான். அவன் வந்து உட்கார்ந் தான்.

2. பின்னும் போஸ் ஊர்க்கிழவ னாரில் பத்துப் பேரை அழைத்துவந்து: இங்கே உட்காருங்கள் என்று அவர்களுக் குச் சொன்னான்.

* 2-ம் வசனம். உபா. 25:7.

3. அவர்களும் உட்கார்ந்தபின் போஸ் அந்த உறவினனை நோக்கி: மோவாப் நாட்டினின்று திரும்பிவந்த நோயேமி நம் சகேதரனான எலிமெலேக் குடைய பூமியின் பாகத்தை விற்கப் போகிறாள்;

4. (இங்கே) உட்கார்ந்திருக்கிற என் ஜனத்தின் பெரியோர்களுக்கும் ஊரார் எல்லாருக்கு முன்பாகவே நீர் இதை அறியும்படி சொல்லக் கருத்துக் கொண் டேன். உறவு சுதந்தரப்படி நீர் அதை மீட்டுக் கொள்ள வேண்டுமானால் மீட்டுக் கொள்ளும். உமக்கு இஷ்ட மில்லையென்றால் இனி ஆக வேண் டியதை நான் பார்க்கும்படி எனக்குச் சொல்லிவிடும். முதல் நீர், இரண்டாவது நான். ஆக உம்மையும் என்னையுந் தவிர வேறொரு உறவினனுமில்லையே என்று சொல்ல, அவன்: நான் நிலத்தை மீட்டுக் கொள்வேன் எனப் பிரதி கூறினான்.

5. போஸ் அவனை நோக்கி: நீர் (அந்த) மனுஷி கையிலிருந்து அந்த நிலத்தை வாங்குகிறபோது இறந்து போன அவனுடைய மனைவியான மோவாப் ஸ்திரீயாகிய ரூத் என்பவளை யும் அங்கீகரிக்க வேண்டும். மரித்த உமது உறவினனுடைய சுதந்தரத்தில் அவன் பெயரை நிலைநிற்கப்பண்ணுவது (கட் டளையல்லவா) என்றான்.

6. அப்போது அந்தச் சுதந்தரவாளி என் குடும்பத்தின் சுதந்தரத்தைக் கெடுக் காதபடிக்கு என் சுதந்தர உரிமையை நான் விட்டு விடுகிறேன். அதை மனதார விடுவதற்கு இதோ வாக்களிக்கிறேன், எனக்குப் பதிலாக நீரே மீட்டுக்கொள் ளும் என்று பதில் கூறினான்.

7. (அறியவேண்டிய தென்னவென்றால்) இஸ்றாயேலிலே இருந்த பூர்வீக வழக்கப்படி சுதந்தரவாளிகளில் ஒருவன் மற்றொருவன் கையில் தன் உரிமையை அறக் கொடுத்து விட்டால் அதை உறுதிப் படுத்துவதற்கு அடையாளமாக அவன் தன் பாதரட்சையைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுப்பான். இது இஸ்றாயேலிலே வழங்கின உறுதிப்பாடு. 

8. ஆனபடியால் போஸ் அந்தச் சுதந்தரவாளியைப் பார்த்து: உன் பாதரட்சையைக் கழற்றிக் (கொடு) என, அவன் உடனே தன் காலிலிருந்த பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.

9. அப்பொழுது (போஸ்) வயது மூத்தோரையும் எல்லாச் சனத்தையும் பார்த்து: எலிமெலேக், கேளி யோன், மஹலோன் என்பவர்களுக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும் நோயேமியின் கையிலே நான் வாங்கிக் கொண்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சி.

10. இதுவுமன்றி இறந்தவனுடைய பேர் அவன் குடும்பத்திலும் சகோதரரிலும் சனத்திலும் அற்றுப் போகாமல் தன் கோத்திரத்திலேயே அவனுக்குப் பேர் விளங்கச் செய்ய வேணுமாய் மஹலோன் பெண்சாதியாகிய மோவாபித்த ரூத் தையும் நான் கலியாணஞ் செய்யப் போகிற ஒப்பாசாரத்திற்குமல்லோ நீங்கள் சாக்ஷிகளுமாயிருக்கிறீர்கள்! என்றான்.

11. ஒலி முகவாசலிலிருந்து சகல ஜனங்களும், வயது மூத்தோரும் அவனை நோக்கி: நாங்கள் சாக்ஷிகளா யிருக்கிறோம், உன் வீட்டில் உட்படப் போகிற இந்த ஸ்திரீயைக் கர்த்தர் இஸ்றாயேல் வீட்டை ஸ்தாபித்த ராக்கேலைப் போலவும், லீயாளைப் போலவும் ஆசீர்வதிக்கக்கடவாராக. இவள் எப்பிராத்தா ஊரிலே புண்ணிய மாதிரிகையாயிருக்கவும், பெத்லேமில் புகழ் வெற்றிருக்கவுங் கடவாளாக.

* 11-ம் வசனம். எப்பிராத்தா-பெத்லேம்.

12. இந்த வாலிபப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச் செய்யப் போகிற புத்திர சந்தானத்தினால் உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பாரேசுடைய வீட்டைப்போல் ஆகக் கடவதென்றார்கள்.

* 12-ம் வசனம். ஆதி. 38:29.

13. ஆகையால் போஸ் ரூத்தை விவாகம் பண்ணி அவளிடம் பிரவேசித்த போது அவள் கர்ப்பந்தரித்து ஓர் குமாரனைப் பெறும்படி கர்த்தர் அவளுக்கு அநுக்கிரகம் பண்ணினார்.

14. அப்பொழுது ஸ்திரீகள் நோயேமி யை நோக்கி: ஆண்டவருக்குத் துதி உண்டாக! ஏனெனில் அவர் உன் குடும் பத்தின் சுதந்தரவாளியற்றுப்போக விடா மல், அவன்பேர் இஸ்றாயேலில் பிரபல மாகச் செய்ததன்றி, 

15. உன் ஆத்துமாவைத் தேற்றி முதிர்காலத்திலே உன்னைப் போஷிக்கத் தக்க ஒருவனை உனக்குத் தந்தருளி னாரே, உன்னை நேசிக்கிற மருகியான வளுக்குப் பிள்ளை பிறந்திருப்பதே உனக்கு ஏழு புத்திரர் உண்டாயிருப் பதிலும் நன்றாமன்றோ? என்றார்கள்.

16. நோயேமி அந்தப் பிள்ளையை எடுத்துத் தன் மடியிலே வைத்துக் கொண்டு அதுக்குச் செவிலித் தாயாகி குழந்தையை இடுப்பிலே தூக்கி வளர்த்து வந்தாள்.

17. அயல் வீட்டு ஸ்திரிகளோ நோயேமிக்கு ஒரு மகன் பிறந்ததென்று அவளை வாழ்த்தி அதற்கு ஓபேதென்று பேரிட்டார்கள். இவன்தான் தாவீதின் தகப்பனாகிய ஈசாயியுடைய தந்தை.

18. பாரேசுடைய வமிசக்கிரமமாவது: பாரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்; 

* 18-ம் வசனம். 1 நாளா. 2:5; 4:1; மத். 1:3.

19. எஸ்ரோன் ஆராமைப் பெற்றான்; ஆராம் அமினதாபைப் பெற்றான்;

20. அமினதாப் நகஸோனைப் பெற்றான்; நகஸோன் சால்மோனைப் பெற்றான்; 

21. சால்மோன் போஸைப் பெற்றான்; போஸ் ஒபேதைப் பெற்றான்; 

22. ஒபேதோ ஈசாயியைப் பெற்றான்; ஈசாயி தாவீதைப் பெற்றவனாம்.


ரூத்தாகமம் முற்றிற்று.